சனி, 16 ஏப்ரல், 2016

Appendix என்ற குடல்வால்....


குடல்வால்..
நமக்கு உபத்திரவமா, உதவியா..?
  • Appendix என்ற குடல்வால், நமது உடலில் சிறுகுடலும், பெருங்குடலும் சந்திக்கும் இடத்தில் அமைந்திருக்கும்.
  • 'Vermiform appendix' என்பது குடல்வாலின் மருத்துவப்பெயர்.
  • லத்தீனில், Vermiform என்றால் புழு போன்ற; appendere என்றால் ஒட்டிக்கொண்டு எனப்பொருள்.
  • குடல்வாலின் நீளம் 7-11cm வரை இருக்கும். சுற்றளவு 1-7mm இருக்கும்.
  • மனிதனின்  பரிணாம வளர்ச்சியில், உணவுப்பாதையில் பெரியதொரு உறுப்பாகத் தோன்றிய குடல்வால், தற்போது சுருங்கி, வால் போல மாறிவிட்டது.
  • ஆரம்ப காலத்தில் குடல்வால் ஒரு செரிமான உறுப்பாக, cellulose எனும் நார்ச்சத்தை செரிமானிக்க உதவும் உறுப்பாக இருந்ததாம்..
  • குடல்வால், தற்போது உணவை செரிமானம் செய்யும் பணியில் ஈடுபடுவதில்லை என்பது ஒரு அறிவியல் நம்பிக்கை.


  • ஆகவே, குடல்வால் மனிதனுக்கு, உபயோகமற்ற உறுப்பு... 'Vestigial remnant' என அழைக்கப்படுகிறது.
  • குடல்வாலில் தோன்றும் நோய்கள்.. Appendicitis என்ற குடல்வால் அழற்சி. மற்றும் Appendicular carcinoid என்ற குடல்வால் புற்றுநோய்.
  • Appendicitis என்ற குடல்வால் அழற்சியில் அதிகமான வலி இருக்கும். இது குழந்தைகளையும், இளம் வயதினரையும் அதிகம் பாதிக்கின்றது. அதிலும் பெண்களைக் காட்டிலும் ஆண்களை அதிகம் பாதிக்கின்றது.
  • குடல்வால் அடைபடுவதே, அழற்சிக்கு முக்கிய காரணமாகும். மலக்கல், பழவிதைகள், குடல்புழுக்கள் அல்லது கட்டிகள் காரணமாகும். சுகாதாரமற்ற உணவு / தண்ணீர் மூலம் உடலுக்குள் நுழையும், E.coli, B.fragilis, Enterococcus என்ற பாக்டீரியாக்கள் குடல்வால் அழற்சியை ஏற்படுத்தும்.
  • Faecolith என்ற 'மலக்கல்' மலச்சிக்கல் உள்ளவர்களிடையே காணப்படும். இது எளிதில் குடல்வாலை அடைத்து அழற்சியை ஏற்படுத்தும்.

  • குடல்வால் அழற்சி இருவகைப்படும்.
  1. -திடீர் குடல்வால் அழற்சி (Acute appendicitis). 
  2. -நாள்பட்ட குடல்வால் அழற்சி (Chronic appendicitis).
  • அறிகுறிகள்
  1. -கடுமையான அடிவயிற்று வலி.
  2. -வாந்தி.
  3. -காய்ச்சல்.
  4. -Rebound tenderness என்ற தொட்டவுடன் அதிகரிக்கும் வலி.
  • பரிசோதனைகள்
  1. -Ultrasound என்ற ஸ்கேன் மற்றும் CTஸ்கேன்.
  2. -இரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனைகள்.
  • சிகிச்சை.
  1. அறுவை சிகிச்சை மட்டுமே.
  2. -Open surgery எனும் வயிற்றைக் கிழித்து செய்யப்படும் அறுவை முறை
  3. -Laparoscopy எனும் நுண்துளை அறுவை சிகிச்சை.
  • Laparoscopic Appendectomy எனும் ‘நுண்துளை அறுவை சிகிச்சைமுறை’யில் வயிற்றில் சிறு துளைகள் மூலம் குடல்வாலை அகற்றுவது எளிய சிகிச்சை முறையாகும்.
  • அறுவை சிகிச்சை பெறத் தவறினால், குடல்வால் அழுகி வெடிக்கும் ஆபத்தும் உள்ளது. (Appendicular perforation, Peritonitis)
  • குடல்வால் அழற்சியைத் தடுக்க சில உணவுமுறைகள்..
  • ஆனால்... 'உதவி இல்லாவிட்டாலும் உபத்திரவம் உண்டு’ என குடல்வாலை கரித்துக் கொட்டிய உலகத்தை மாற்றி சிந்திக்க வைத்துள்ளது ஒரு புதிய ஆராய்ச்சி...
  • குடல்வால், IgA என்ற நோய் எதிர்ப்பு பொருளை அதிகம் சுரந்து, பெருங்குடலை காக்கின்றது என்கிறது ஆய்வு.
  • பிறந்த இரண்டு வாரங்களிலேயே, குடல்வால், தனது நோய் எதிர்ப்பு பணியைத் தொடங்கி விடுகிறது.
  • William Parker, என்ற மருத்துவ ஆராய்ச்சியாளர், குடல்வால் நமது உடலின் நல்ல பாக்டீரியாக்களின் இருப்பிடம் என்கிறார். குடல்வால் இல்லையெனில், Clostridium போன்ற கொடிய கிருமிகளால் குடல் முழுவதும் அழற்சி ஏற்படலாம் என்கிறது William Parkerன் ஆராய்ச்சி..

  • ஆம்..பரிணாம வளர்ச்சியில் மாறி, சுருங்கிய குடல்வாலும் நமக்கு நன்மையே தரும். நமது உணவுமுறைகளே, அதன் அழற்சியை தரும்!!
*****************

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக