- அமீக்டலா என்றால் கிரேக்க மொழியில், (almond) பாதாம் கொட்டை என்று பொருள்.
- Temporal lobe எனப்படும், முன் மூளையின் கீழ், இருபக்கமும் அமைந்துள்ள அமீக்டலாவின் அளவு 1 inch மட்டுமே.
- உலகத்தின் ஆதி உணர்வு அச்சம் தான். இதுதான் உலகத்திலுள்ள எல்லா உயிர்களுக்கும் பொதுவான உணர்வு.
- மனிதன் சமூக விலங்கு. அவனும் முதலில் வெளிச் சமூகத்தை அச்சத்துடனே பார்க்கிறான்.
- அரிஸ்டாட்டில், 'மனிதன் ஒரு சிந்தனை மிருகம்' என்று கூறியுள்ளார்.
- அமீக்டலா அச்சம், கோபம், விறுவிறுப்பு போன்ற மனிதனின் எதிர்மறை உணர்ச்சிகளின் கிடங்கு.
- மேலும் ஞாபகத்திறன், செயலாற்றும் திறன் ஆகியவற்றை கட்டுப்படுத்தும் Limbic systemத்தின் முக்கிய உறுப்பு அமீக்டலா.
- மூளையின் இருபக்கத்திலும் அமைந்திருக்கும் அமீக்டலா இருவகையான திறனமைப்பு கொண்டது.
- வலதுபக்க மூளையில் உள்ள அமீக்டலா அச்சம், கோபம், விறுவிறுப்பு போன்ற மனிதனின் எதிர்மறை உணர்ச்சிகளின் கிடங்கு.
- இடதுபக்க மூளையில் உள்ள அமீக்டலா திருப்தி, மகிழ்ச்சி, வெற்றி போன்ற தன்னிறைவு உணர்ச்சிகளை உள்ளடக்கியது.
- Episodic memory எனப்படும் திடீர் நினைவலைகளை மனிதனுக்கு உணர்த்துவது அமீக்டலா தான்.
- ஆண்-பெண் மூளை வித்தியாசங்கள் அமீக்டலாவிலும் உள்ளது.
- ஆண்களின் வலது பக்க அமீக்டலா சற்றே பெரியதாம். அச்சம் போன்ற உணர்வுகளை ஆண் சுலபமாக கையாள காரணமாகலாம்.
- பெண்களின் இடது பக்க அமீக்டலா சற்றே பெரியது. ஞாபகத்திறன் கூடுதலாக இருக்க காரணமாகிறது.
- நகர்புற மக்களின் அமீக்டலா உருவளவு சற்று கூடுதலாக இருப்பதும் மனிதன் ஒரு Social animal என்பதை உணர்த்துகிறது.
- அமீக்டலா வழி நடக்கும் போது, மனிதன் விலங்குகளின் முடிவுகளான "தாக்கு அல்லது ஓடு” போன்ற முடிவுகளை எடுப்பான்.
- அமீக்டலாவை கோபம் அல்லது பய உணர்வுகளிலிருந்து அமைதிப்படுத்துவது, மனிதனின் Prefrontal cortex என்ற பகுதியே.
- ADHD, Bipolar disorder, (anxiety)பதட்டம், (panic)பீதி ஆகிய மன நோய்கள் அமீக்டலா பாதிப்பில் தோன்றலாம்.
- Kluver Bucy என்ற நோயில், இருபக்க அமீக்டலாவில் பாதிப்பு ஏற்படுகிறது. இந்நோயில், ஞாபக மறதி, தாக்குதல், பய உணர்ச்சியின்மை ஆகியன இருக்குமாம்.
- Feinstein என்ற ஆராய்ச்சியாளர், 2010ஆம் ஆண்டு நடத்திய ஆய்வில் அமீக்டலா இல்லையென்றால் பய உணர்வு இல்லை என்று கூறுகிறார்.
- தியானம், படைப்பாற்றல் மற்றும் திறன் மேம்படுத்தும் வகுப்புகள் ஆகியன அமீக்டலா-கார்டெக்ஸ் நரம்புகளை மேம்படுத்துவதாக ஆராய்ச்சி கூறுகின்றது..!
ஆம்..
மூர்த்தி சிறியதாயினும்,
கீர்த்தி பெரியதாம்..
அமீக்டலாவுக்கும்...!!
********************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக