Men are from Mars..
Women are from Venus..
- ஆணும் பெண்ணும் எதிர்த்திசையில் பயணிக்க காரணங்கள் இப்போது..
- ஆண்கள் மற்றும் பெண்களின் மூளையை பற்றி நடத்தப்பட்ட ஆய்வில், இருவரது செயல்திறன் பற்றி கூறப்படும் கருத்துகள் உண்மை என்று கண்டறியப்பட்டுள்ளது.
- ஆணுக்கும், பெண்ணுக்கும் அறிவியல் பூர்வமாக, வித்தியாசங்கள் இருப்பதாக முதன்முதலாக எடுத்துரைத்தது அரிஸ்டாட்டில்...
- வயிற்றுக்குள் வளரும் குழந்தை, 6 மாதத்தில் முதல் வித்தியாசத்தை பதிவு செய்துவிடுகிறது.... வளரும் பெண் சிசுவின், Corpus callosum, தடிமன் அதிகமாம்.
- Corpus callosum, மூளையின் இடது வலது பகுதிகளை இணைக்கும் தசை. மொழித்திறன் பெண்களுக்கு கூடுதலாக இருப்பதற்கு காரணமாம்!
- ஆண், பெண் செயல்களில் சில வேடிக்கையான வேற்றுமைகள் இங்கே..
- ஆணின் முன் மூளையானது, (frontal lobe) பெண்ணின் மூளையைவிட, 1% கூடுதல் அளவில் இருக்கின்றதாம்.
- எடையில் ஆணின் மூளை 1500g, பெண்ணின் மூளை 1200g..
- Neuronal network எனப்படும் நரம்புப் பாதைகளும், ஆணுக்கு அதிகமாம்.
- Multitasking: பெண்களின் மூளை ஒரே நேரத்தில் பல பணிகளை செய்ய க்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது! ஆனால், ஆண்களின் மூளை ஒருநேரத்தில் ஒரு பணியை மட்டுமே செய்யக் கூடிய வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது.
- Spatial ability: வாகனத்தை ஓட்டும்போது, தூரத்தில் வரும் வாகனத்தின் வேகம், பயணிக்கும் திசை ஆகியவற்றை முன்கூட்டியே கணிக்க ஆண்களால் முடியும். ஆனால், வாகனத்தை பெண்கள் ஓட்டும்போது, கணிப்பு திறன் மற்றும் சிக்னல் உணர்வு குறைவாகவே உள்ளது.
- Stress: ஒரு பெண்ணிற்கு தனது காதல்/ உறவுகளிடையே பிரச்சனை இருந்தால், வேலையில் கவனம் செலுத்த முடியாது. ஆனால், ஒரு ஆணுக்கு, தனது வேலையில் பிரச்சனை இருந்தால், காதல்/ உறவுகளில் கவனம் செலுத்த முடியாது.
- Analytical skills: எந்த பிரச்சனைக்கும் ஒரு தீர்க்கமான முடிவை ஆண்களால் எடுக்க முடியும். ஆனால், பிரச்சினைகளில், பெண்களால், தீர்க்க முடிவை எடுக்க முடியாது. ஆண்கள் எடுக்கும் தீர்மானத்தை உணர்ந்து கொள்ளவும் முடியாது.
- Language and learning: பெண்களால் எளிதாக பலமொழிகளைக் கற்றுக் கொள்ள முடியும். ஞாபகத்திறன் அதிகமும் பெண்களுக்கே. ஆண்கள், மொழி மற்றும் ஞாபகத்திறனில் இரண்டாம் நிலை தான் வகிக்கின்றனர்..
- Goals: மதிப்பு, வெற்றி, தீர்வுகள், பெரிய செயலாக்கங்கள் ஆகியவை ஆண்களின் குறிக்கோள்கள். உறவுகள், நட்பு, குடும்பம் ஆகியவற்றை இணைக்கும் செயலாக்கங்கள் பெண்களுக்கானவை.
- Serotonin, Dopamine என்ற நரம்பூக்கிகள் பெண்களுக்கு அதிகம் சுரக்கின்றதாம். இவையே, பெண்களை வேறுபடுத்தி காட்டுகிறதாம்.
- சமீபத்திய ஆய்வுகள், ஆண் பெண் பிரிவினைகள், எப்போதும் ஏற்புடையதல்ல, (mosaic pattern) கலவையாகவே இருக்க வளரும் சூழல்களே காரணம் என்று கூறுகிறது.
"என்னைப் போலவே நீ.. ஆயினும்
முற்றிலும் வேறாக நீ..!"
என, வாழ்விலும் காதலிலும் ஈர்ப்பது வேற்றுமையிலும் ஒற்றுமையே..!
******************
****************************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக