வெள்ளி, 22 ஏப்ரல், 2016

சிறுநீரக கற்கள்...


சிறுநீரக சுண்ணாம்பு கற்கள்


  • கோடை ஆரம்பித்தவுடன், நம்மை வாட்டுவது, சுட்டெரிக்கும் வெய்யில் மட்டுமல்ல... சுண்ணாம்பு கற்களும் தான்..
  • சிறுநீரானது சிறுநீரகத்தில் உற்பத்தியாகி, சிறுநீர்க் குழாய் வழியே சிறுநீர்ப் பைகளுக்கு வந்து பிறகு வெளியேறுகிறது.
  • கலங்கிய நீரில் கசடு படிவதைப் போல, சிறுநீரகத்தில் படியும் படிவங்கள் தான், கல்லாக உருவாகிறது.
  • சிறுநீரகத்தில் இருக்கும் கல், சிறுநீர்ப் பாதை வழியாக நகர்ந்து வெளியேறும்போதுதான் கடுமையான வலி ஏற்படும்.
  • பொதுவாக, பெண்களோடு ஒப்பிடும் போது ஆண்களுக்கே சிறுநீரகக்கல் உருவாவதற்கு 3 மடங்கு வாய்ப்பு அதிகம்.
  • குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். பொதுவாக 30-60 வயதினருக்கு அதிக வாய்ப்பு.
  • தண்ணீரை சரியான அளவு (2-3 litre) குடிக்காத போது, ஏற்படுவது தான், சிறுநீரகத்தில் கற்கள்..
  • இறைச்சி, முட்டை சார்ந்த பொருட்களை அதிகம் சாப்பிடுவது, குறைந்த அளவு தண்ணீர் குடிப்பது ஆகியவை சிறுநீரகக் கல் தோன்றுவதற்கு முக்கியக் காரணங்கள்.
  • சிறுநீர் போகிற பாதையில் அடைப்பிருந்தாலோ, பாரா தைராய்டு எனப்படுகிற சுரப்பியின் அதீத இயக்கத்தினாலோ, கிருமிகளாலோ சிறுநீரகத்தில் கல் வரலாம்.
  • பெரும்பாலும் சிறிய கற்கள் (5-6mm)சிறுநீரில் வெளியேறிவிடும். சிறுநீரில் வெளியேற முடியாத பெரிய கற்கள்தான் (>10mm)வலியை ஏற்படுத்துகின்றன..
  • சிறுநீரகக் கல் கால்சியம் ஆக்சலேட் எனப்படும் சுண்ணாம்புச் சத்தினால் ஆனவை.
  • சிலருக்கு, யூரிக் அமில கற்களும் வரலாம்..
  • சிறுநீரக கற்களை கண்டுபிடிப்பது எப்படி?
  1. அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்..
  2. வயிற்றுப் பகுதிக்கான எக்ஸ்-ரே படம்..
  3. சிறுநீர்ப் பரிசோதனை..
  4. இரத்த பரிசோதனை..
  • 1 cm குறைவான கல்லாக இருந்தால் முதலில் வலி நிவாரணிகள் மற்றும், 3-4 லிட்டர் தண்ணீர் மட்டுமே சிகிச்சை.. சிறுநீர் நன்கு போகச் செய்யப்படும்..
  • 5mm சிறுநீரக கல் எனில் சிறுநீரிலேயே வெளியேறி விடும். 8mm வரை, 80% வெளியேறிவிடும்.. அறுவை சிகிச்சை, வெகு சிலருக்குத் தான் தேவைப்படும்
  • 2 cm வரை உள்ள கற்களை லித்தோட்ரிப்சி எனும் மின்அதிர்வு அலைகளைச் செலுத்தி, கல்லை உடைத்து, அது தானாகச் சிறுநீரில் வெளியேறும்படிச் செய்யலாம்.
  • வாழ்க்கை முறை மாற்றங்களில் மிக எளியதும் முக்கியமானதும் அதிக தண்ணீர் (3-4l) குடிப்பதுதான். மற்ற திரவங்களை விட தண்ணீரே மிகச் சிறந்தது.
  • ஈரப்பதம் அதிகமுள்ள உணவு வகைகள், நார்ச்சத்து அதிகமுள்ள உணவு வகைகளை் சேர்தால் சிறுநீரகக் கல் உருவாகாமல் தடுக்க உதவும்.
  • சிறுநீரகக்கல் உள்ளவர்கள் வாழைத்தண்டு சாறு சாப்பிடுவது நல்லது. கல்லைக் கரைக்கும் தன்மையும் இதற்குண்டு

  • பால், தயிர், வெண்ணெய், பாலாடைக்கட்டி, பால்கோவா ஐஸ்கிரீம் ஆகியவற்றில் கால்சியம் அதிக அளவு உள்ளதால் தவிர்ப்பது நல்லது.
  • சிறுநீரகம் சார்ந்த பிரச்சினைகளை, வாழ்க்கை முறை மாற்றத்தின் மூலம் நன்கு தடுத்திட முடியும்..

******
******************
******

2 கருத்துகள்:

  1. தண்ணீர் பலமருத்துவ குணங்களை தனகத்தே கொண்டுள்ளது. தண்ணீரில் இருக்கும் நற்குணமே நம் உடலுக்குதேவையான ஆரோக்கியத்தை தரும் தண்ணீர் மருத்துவ த்தின் நன்மைகள்

    பதிலளிநீக்கு
  2. We are urgently in need of kidney donors with the sum of $500,000.00 USD (3 crore) and Also In Foreign currency. Apply Now!,For more info Email: healthc976@gmail.com , Call or whatsapp +91 9945317569

    பதிலளிநீக்கு