"மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா...!”
-தேசிக விநாயகம் பிள்ளை.
- பாரதி கண்ட புதுமைப் பெண்களாய் “நிமிர்ந்த நன்னடையும், நேர்கொண்ட பார்வையும்” பெற்ற இன்றைய பெண்கள் கால் பதிக்காத துறைகளே இல்லை எனலாம்..
- ஆற்றல் மிக்க பெண்கள் தங்கள் உடல்நலத்தில் அக்கறை செலுத்துகின்றார்களா என்றால்... இல்லை என வருத்ததோடு சொல்லவேண்டியுள்ளது.
- "வருமுன் காப்போம்"
- புற்றுநோயை வருமுன் காப்போம்... ஆரம்பநிலையில் கண்டறிந்தால் புற்றுநோயை முற்றிலும் குணப்படுத்தலாம்.
- Cancer screening எனப்படும், புற்றுநோய் வருமுன் கண்டறிய உதவும், Mammogram மற்றும் PAP's smear பற்றிய தகவல்கள் இப்போது....
- உலக அளவில் அமெரிக்கா, சீனாவை அடுத்து மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இந்தியா மூன்றாம் இடம் வகிக்கிறது.
- ஆண்டுதோறும் 7 லட்சம் பெண்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாகவும், மேலும், ஆண்டுக்கு 3 லட்சம் பேர் இறப்பதாகவும் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது..
- மார்பக புற்றுநோய் வருவதை கண்டறிய மாமோகிராம் என்னும் "ஸ்கிரீனிங்' டெஸ்ட் உதவுகிறது.
- மாமோகிராம் என்பது குறைந்த கதிர்வீச்சு X-ray ஆகும். இது மார்பில் தோன்றும் மாற்றங்களை கண்டறிந்து, மார்பக புற்றுநோயை வருமுன் கண்டறிய உதவும்.
- 25 வயது முதல் 40 வயது வரையுள்ள பெண்கள், 3 வருடங்களுக்கு ஒரு முறை மருத்துவரிடம் மார்பகப் பரிசோதனை செய்துகொள்வது அவசியம்.
- 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், ஆண்டுதோறும் மாமோகிராம் மேற்கொள்ள வேண்டும்.
- மாதவிலக்கு ஏற்பட்ட 7-10 நாட்களுக்குள் மார்பகத்தை சுயபரிசோதனை செய்து கொள்ளலாம். மார்பில் கட்டி, வீக்கங்கள் இருக்கிறதா என கவனிக்க வேண்டும்.
- இந்தியாவில் செர்வைகல் கேன்சர், பெண்களின் முதன்மையான புற்றுநோயாகும். இன்று, உலகில் செர்வைகல் கேன்சரால் இறக்கும் 4 ல் 1 பெண் இந்தியர்..!
- பெண்களுக்கு ஏற்படுகிற கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறியும் பரிசோதனை தான், பாப் ஸ்மியர் டெஸ்ட்..
- 21-65 வயது வரை, பெண்கள், 2 ஆண்டு இடைவெளியில் ‘பாப் ஸ்மியர்’ பரிசோதனையைச் செய்துகொள்வது நல்லது.
- PAP's smear, எனப்படும் கர்ப்பப்பை வாய் புற்றுநோயை கண்டறியும் பரிசோதனை, மிக எளிய முறையில், செய்யப்படும் டெஸ்டாகும்..
- ஹியூமன் பாப்பிலோமா வைரஸ்’ (Human Papilloma Virus HPV) என்கிற கிருமி கருப்பை வாயைத் தாக்கும்போது புற்றுநோய் வருகிறது.
- தற்போது, செர்வைகல் கேன்சர் வராமல் தடுக்க, HPV தடுப்பூசி உள்ளது. 10-30 வயதுள்ள பெண்கள், இந்த ஊசியை போட்டுக்கொள்ளலாம்.
- நோய்கள் வருவதற்கு முன்னமேயே தற்காப்பு மருத்துவப் பரிசோதனைகளைச் அவ்வப்போது செய்துகொள்வது நல்லது.
சிருஷ்டிக்க வல்ல..
சக்தியின் ரூபம் பெண்..!!
*****************************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக