- Gastrocnemius மற்றும் Soleus என்பன நமது கெண்டைக் காலின் முக்கிய தசைகளாகும். Achilles tendon என்ற குதிகால் தசைநார், நமது காலின் கெண்டை தசைகளை குதிகால் எலும்போடு பிணைக்கும் தசைநாராகும்.
- 15cm நீளமுள்ள, அக்கிலிஸ் தசைநார், நமது உடலின் உறுதியான மற்றும் மிகப்பெரிய தசைநாராகும்.
- நம்மை கால் விரல்களில் நிற்க வைப்பது அக்கிளிஸ் தசைநார் தான். மேலும் நாம் நடப்பது, நிற்பது, ஓடுவது மற்றும் குதிப்பது என்ற பாதங்களின் மிக முக்கிய பணிகளுக்கு உதவுவதும் அக்கிளிஸ் தசைநார் தான்.
- நாம் ஓடும்போது, உடல் எடையை விட, 7.7 மடங்கு எடையை அக்கிளிஸ் தசைநார் தாங்கும்.
- அக்கிளிஸ்... பெயர் காரணம்..... கிரேக்க வரலாற்றில் ட்ரோஜன் போரில், அக்கிளிஸ் ஹெக்டரைக் கொன்று அவனது குதிகால் தசையில் ரதத்தில் கட்டியிழுத்து சென்றான். மேலும் அக்கிளிஸின் அன்னையான தேட்டிஸ், ட்ரோஜன் போரில் மகன் இறந்துவிடுவான் என்று தீர்க்க தரிசித்து மகனை ஸ்டீக்ஸ் நதியில் மறைத்து வைக்கிறாள். அக்கிளிஸின் கால் தசைநாரில் விஷ அம்பெய்தி பாரிஸ் அவனைக் கொன்று போரை வெல்கிறான் என்கிறது கிரேக்க வரலாறு.
- மனிதனின், பரிணாம வளர்ச்சியின், வெளிப்படையாகவும் அக்கிளிஸ் தசைநார் விளங்குகிறது. Apes எனப்படும் மனிதக் குரங்குகளில் அக்கிளிஸ் தசைநார் மிகவும் சிறியதாக காணப்படுகிறது.
- மனிதனின் நெடுந்தூர நடை அல்லது ஓட்டத்திற்கான தசைநார் என்ற பெருமையைக் கொண்டது அக்கிளிஸ் தசைநார். ஆனால், தடகள மற்றும் விரைவோட்டப் போட்டிகளின் போது, அக்கிளிஸ் தசைநார் கிழிபட வாய்ப்புள்ளது.
- Achilles tendonitis என்ற தசைநார் வீக்கம் குதிகால் வலி மற்றும் கால் விறைப்பை ஏற்படுத்தும். வயோதிகம் மற்றும் கீல்வாதத்தில் (arthropathy) அக்கிளிஸ் வீக்கம் மற்றும் கீறல் தசைகளின் இயக்கத்தை பெருமளவு பாதிக்கிறது. அக்கிளிஸ் தசைநார் வலிக்கு தகுந்த மருந்துகள் மற்றும் உடற்பயிற்சி பரிந்துரைக்கப்படுகிறது. தேவைப்படும் போது, அக்கிளிஸ் அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்படும்.
- மேலும், (heel)குதி அதிகமில்லாத மென்மையான, மற்றும் தரை பிடிமானம் மிக்க காலணிகள் பரிந்துரைக்கப் படுகிறது.
வலிமை..!
இது மனதிற்கு மட்டுமல்ல..
நம் கால்களின் அக்கிளிஸ்க்கும் தான்..!
*****************************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக