மற்றும், கர்ப்ப கால Down screening...
- John Down என்ற ஆங்கிலேய மருத்துவர், 1866ஆம் ஆண்டில், முதன்முதலாக, மன நலிவுடன் பிறக்கும் குழந்தைகள் பற்றி கட்டுரை வெளியிட்டார்.
- ஆண்களின் 23 குரோமோசோம்களும், பெண்ணின் 23 குரோமோசோம்களும் இணைந்து கரு உண்டாகிறது. குரோமோசோம் ஜோடிகளில் 21-வது குரோமோசோம் ஜோடியில் ஏற்படும் குறைபாடு காரணமாக டவுன் சிண்ட்ரோம் ஏற்படுகிறது. குரோமோசோம் இணைவின்போது 21-வது குரோமோசோமின் நகலும் கூடுதலாகச் சேர்ந்துவிடும்.
- இந்தியாவில் பிறக்கும் 600 குழந்தைகளில் ஒரு குழந்தை டவுன் சிண்ட்ரோம் எனப்படும் மனநலம் குன்றிய குழந்தையாக உள்ளது.
- தட்டையான முகம், சரிவான நெற்றி, கண்கள் மேல்நோக்கிச் சாய்ந்திருத்தல், தட்டையான மூக்கு போன்ற அடையாளங்கள், டவுன் சிண்ட்ரோமில் காணப்படும்.
- டவுன் குழந்தைகளுக்கு இதயக் கோளாறு, நாளாமில்லாச் சுரப்பிக் குறை, இரத்த புற்றுநோய், தொற்றுநோய் போன்றவை ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகம்.
- டவுன் சிண்ட்ரோமின் மன நலிவுக் குறைபாட்டை முற்றிலும் குணப்படுத்த முடியாது.
- ஆனால், கர்ப்ப காலத்திலேயே பிறக்க போகும் குழந்தைக்கு டவுன் சிண்ட்ரோம் உள்ளதா என்பதை தொழில்நுட்ப கருவிகள் மூலம் கண்டறிய முடியும்.
- கரு உருவான 11-13 வாரங்களில் குழந்தையின் மூளை வளர்ச்சி பற்றி அறியலாம்.
- கர்ப்பிணியின், ரத்தம் மற்றும் ஸ்கேன் மூலம், Dual Test என்ற பரிசோதனை நடத்தப்படும். Dual test முடிவைக் கொண்டு, Chorion villus sampling என்ற கருவின் திசுக்களை எடுத்து குரோமோசோம் பரிசோதனை செய்து உறுதிபடுத்தப் படும்
- Amniocentesis என்ற பனிக்குட நீர் துளைப்பு, 16-18 வாரக் கருவின் பனிநீரில் செய்யப்படும் குரோமோசோம் பரிசோதனை.
- 35 வயதிற்கு மேல் கருத்தரிக்கும் தாய்மார்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு டவுன் சிண்ட்ரோம் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் என்கிறது ஆய்வு.
- கருவுற்றிருக்கும் அனைத்து தாய்மார்களும் இந்த சோதனைகளை செய்து கொள்வது அவசியமாகும்.
- டவுன் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு... மன நலிவுக் குறைபாடு கொண்ட குழந்தைகளுக்கு அன்பும் அரவணைப்பும் அவசியம்.
- தக்க பயிற்சியின் மூலம், பாதிக்கப்பட்ட குழந்தையின் செயல்பாடுகளில் மாற்றத்தை ஏற்படுத்தலாம்.
- புலன் உணர்வு, உடலியக்கச் செயல்பாடுகள், அறிவாற்றல் ஆகியவற்றில் மாற்றங்களை உருவாக்க முடியும்.
- தகுந்த பயிற்சியளித்தால், அடிப்படை வேலைகளுக்குக் குழந்தை பிறரைச் சாராமல் இருக்க முடியும்.
மனதை தொட்ட வரிகள்...
I Have a Dream...
Someday ALL parents who have children with disabilities see their child...
As a BLESSING and not a burden.
&&&&&&
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக