சனி, 16 ஏப்ரல், 2016

புகை... நமக்கு.. பகை..!!


  • புகை நமது உடல் உறுப்புக்கள் அனைத்திற்கும் கேடு விளைவிக்கும்.
  • புகையிலை தான் மரணத்திற்கு இரண்டாம் முக்கிய காரணமாக உள்ளது..
  • ஒவ்வொரு முறை புகைக்கும் போதும், நமது வாழ்நாளில் 11 நிமிடங்களை இழக்கிறோம்.!
  • புகையிலையை புகைக்கையில், அதிலுள்ள, நிகோடின் பத்து நொடிக்குள் மூளையை சென்றடைந்து விடுகின்றது..
  • புகைப்பழக்கம், மாரடைப்பு நோய் வருவதற்கான வாய்ப்பை, 200% அதிகப்படுத்துகின்றது..
  • நிகோடின், நமது சுரப்பிகளை, உத்வேகப்படுத்துவதால் சுறுசுறுப்பையும், மகிழ்ச்சியையும் தற்காலிகமாக தருகிறது..
  • ஒரு சிகரெட்டில், கிட்டத்தட்ட 4800 ரசாயனப் பொருட்கள் நிறைந்துள்ளன.. அவற்றில் பல, புற்றுநோய்க்கு வித்தாக அமைகிறது..
  • உலக வணிகத்தில், முதன்நிலையில் வாணிபம் செய்யப்படுவது சிகரெட்டுகள் என்பதுதான் வேதனையை தருகிறது.
  • தற்காலிகமாக ஒரு உற்சாகம், சுறுசுறுப்பு ஆகியவற்றை, நிகோடின், மூளை நரம்புகளின் டோப்பமின் சுரப்பி மூலமாக நிறைவேற்றுகிறது..
  • நமக்கு ஏற்படும் புற்றுநோய்களில், 30% நோய்களை, புகைப் பழக்கத்தை கைவிட்டாலே, தவிர்க்க முடியும்.
  • பேசிவ் ஸ்மோக்கிங் என்ற, நேரிடையாக புகைப்பிடிக்காமலே புகையினால் பாதிக்கப் படுபவர்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே இருக்கிறது.. 
  • உங்களுக்குத் தெரியுமா... ஹிட்லர் தான், புகை எதிர்ப்பு போரை முதன்முதலாக ஆரம்பித்தாராம்..!! 
  • மேலும் ஒரு தகவல்.. ஆப்பிள் சாதனங்களுக்கு அருகே புகைபிடித்தால் வாரண்டி கிடைக்காது..
  • ஒரே அடியாக, புகைப்பழக்கத்தை நிறுத்த முடியும்.. இது Cold Turkey என்று அழைக்கப்படுகிறது..
  • படிப்படியாய் புகைக்கும் அளவை குறைத்து, கடைசியில் நிறுத்திவிடுவது. இது TapTapering எனப்படும்.. 
  • அத்தியாவசியங்களை விட அநாவசியங்கள் அதிகம் விற்பது மனித வாழ்வின் நாகரிகம் என மாறுவதே வேதனை இங்கே.!
  •  புகை இலை என்பதை நிறுத்துவோம்! புகை இல்லை என கொணர்வோம்!
  • வாழத்தானே வாழ்க்கை...!!!



உங்கள் 
மனைவியையும், மகளையும் 
நீங்கள் நேசிப்பது உண்மை என்றால் 
இன்றே புகையை தவிர்க்கலாமே.!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக