Myths and Facts in Labour
- பனிக்குட நீர் உடைவது தான் பிரசவ வலியின் ஆரம்பம்?
- 10% பெண்களுக்கு மட்டுமே, முன்பாக பனிநீர் கசிவு ஏற்படும்.
- சீரகத் தண்ணீர் குடித்தால் பிரசவ வலி குறையும்?
- சீரகத் தண்ணீர், செரிமானத்தைக் கூட்டும். வலியைக் குறைக்காது.
- ஒன்பதாவது மாதம், நெய் சேர்த்தால் சுகப்பிரசவ வாய்ப்பு அதிகம்?
- எடை கூடுவதற்கான வாய்ப்புகளே அதிகம்!!
- ஆட்டோவில், பயணம் மேற்கொண்டால் சுகப்பிரசவம் நிச்சயம்
- இடுப்பு வலி மட்டும் நிச்சயம்.. பயணிக்கும் அனைவருக்கும்!
- அம்மாவின் பிரசவ வலி போலவே மகளுக்கும் வரும்?
- பிரசவ வலி, மரபணு சார்ந்ததல்ல. ஒவ்வொருவருக்கும் தனித்தன்மை வாய்ந்தது.
- வலியில்லாப் பிரசவ முறை சிசேரியனில் முடியும்?
- இல்லை....வாக்யூம் உதவியுடன், சுகப்பிரசவம் ஆகும் வாய்ப்புகள் அதிகம்.
- சிசேரியன் பிரசவம், சுகப் பிரசவத்தை விட சுலபமானது?
- முன்னே கசந்து, பின்னே இனிப்பது சுகப்பிரசவம். அதற்கு நேரெதிர், சிசேரியன்..
- வலியோடு குழந்தையைப் பெற்றால் பாசம் அதிகமாக இருக்கும்?
- இல்லாவிட்டாலும், தாய்ப்பாசத்திற்கு ஈடு ஏதும் கிடையாது.
- முதுகில், ஊசிபோட்டால், வாழ்நாள் முழுதும், முதுகு வலி இருக்கும்?
- 23G கொண்ட ஊசி பயன்படுத்தப் படுகிறது. போடும் போது கூட வலி இருக்காது.!!
- குழந்தை பிறந்தவுடன், தேன் அல்லது சர்க்கரை நீர் தரவேண்டும்?
- சுகப்பிரசவம் அல்லது சிசேரியனில், உடனடியாக தாய்ப்பால் மட்டுமே வழங்கப்படுகிறது.
- பிரசவத்திற்குப் பிறகு, அதிகமாக தண்ணீர் குடிப்பது கெடுதல்?
- தண்ணீரை, அதிகம் குடிக்காவிட்டால், சிறுநீர் தொற்று மட்டும் மலச்சிக்கல் ஏற்படும்.
- குளிர்ந்த நீரைப் பருகினால், குழந்தைக்கு சளி பிடிக்கும்?
- அம்மாவுக்கு, சளி இருந்தால் மட்டுமே குழந்தையை பாதிக்கும்.
- கீரை, பழங்கள் சேர்த்தால் குழந்தைக்கு வயிற்றுப்போக்கு ஏற்படும்?
- பிறந்த குழந்தைக்கு, 6 மாதங்கள் வரை, வயிற்று போக்கு இயல்பான ஒன்று.
- கீழே உட்கார்ந்தால், தையல் பிரிந்து விடும்?
- Squatting என்ற குத்துக்கால் இடுவது, தசைகள் வலுவானதாக்கும்.
- பிறந்த குழந்தைகளுக்கு, காமாலை வந்தால் ஆபத்து?
- எல்லாக் குழந்தைகளுக்கும், காமாலை ஏற்படும். அதன் அளவைப் பொறுத்தே சிகிச்சை அளிக்கப்படும்.
- குழந்தைக்கு வைட்டமின் சொட்டு மருந்து எடையைக் கூட்டும்?
- தாய்ப்பால் தான் எடையைக் கூட்டும். மருத்துவர் ஆலோசனைக்கு பின் வைட்டமின்கள் தரலாம்.
அக்கா பிறந்த குழந்தை அழுகை பற்றி சொல்லுங்க. எதற்கு அழுகிறது என்று எப்படி கன்டுபிடிப்பது. குழந்தைக்கு வயிற்று வலி அறிகுறி சொல்லுங்க. வயிற்று போக்கு, ஆஜீரனம், வயிற்று கடுப்பு, உரம் விழுதல்,குழந்தை ஏதாவது விழுங்குதல்,சூடு ,மலசிக்கல், வாந்தி இதை பற்றி விளக்கம் தாங்க
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்கு