அறிகுறிகள் மற்றும் மருத்துவ ஆதாரங்கள்..
- மாதவிடாயின் சில நாட்களுக்கு முன்பு ஏற்படும் உடல் மற்றும் மனரீதியான பிரச்சனைகள் (PMS), என்ற Pre Menstrual Syndrome எனப்படும்.
- காரணமில்லாமல் எரிந்து விழுவது, வயிற்று வலி, தலைவலி, கோபம், மன அழுத்தம் - இவையனைத்தும், பெண்களுக்கு மாதவிடாயின் முன்பு தோன்றும் அறிகுறிகள்.
- மார்பக வலி, வீக்கம், தலைவலி, மனச்சோர்வு, தசைப்பிடிப்பு ஆகியன PMS இன் முக்கியமான அறிகுறிகளாகும்.
- PMSல், பெண்கள் உடல் மற்றும் மனதளவில் பாதிக்கப்படுகிறார்கள். இதனால், அந்நாட்களில் இயல்பு வாழ்க்கைப் பாதிப்படைகிறது.
- நினைவில் கொள்க..
- சமையலறையில் பாத்திரங்கள் வீசி எறியப்படும் போது..
- அலுவலகத்தில் பணியாளர்கள் அதிக திட்டு வாங்கும்போது..
- PMS ஆக இருக்கலாம்..!
- மாதவிடாய் ஏற்படுவதற்கு முன்பு, பெரும்பாலான பெண்கள் மார்பகங்களில் கனமான உணர்வு அல்லது மார்பக வலி இருப்பதை அனுபவித்திருப்பார்கள்.
- PMSற்கு, அடிப்படைக் காரணம், ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகமாவதுதான்.
- ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன், அணுக்களில் நீரை தேக்குவதால், மார்பில், கனமான உணர்வு தோன்றுகிறது.
- முகப்பருக்கள் இச்சமயத்தில் வருவதும் ஈஸ்ட்ரோஜன் மற்றும் ஏன்ட்ரோஜன் ஹார்மோன்கள் அதிகமாக சுரப்பதால் தான்..
- அதிகப் பசி, இனிப்பு/எண்ணெய் உணவுகளின் மீது அதீத விருப்பம், வயிற்றுப் போக்கு அல்லது மலச்சிக்கல் ஆகியனவும் தோன்றலாம்.
- மன அமைதியின்மை, எரிச்சல், திடீர் அழுகை, என ஒரு கட்டுப்பாடின்றி தங்கள் உணர்ச்சிகளை பிரதிபலிப்பதும் ஹார்மோன்களால் தான்.
- மாதவிலக்கு ஏற்படுவதற்கு முன் அடிவயிற்றில் வலி, கனமான உணர்வு - இதற்குக் காரணம் கருப்பையிலும் சினைப்பையிலும் ஏற்படும் அதிக இரத்த ஓட்டம்தான்.
- திடீரென்று ஏற்படும் வயிற்றுவலி, சிலரை மயக்கமடையக் கூடச் செய்துவிடும். வாந்தி, வயிற்றுப் போக்கு, வியர்வை, தலைசுற்றல் கூட இருக்கலாம்.
- Prostaglandins என்ற ரசாயன ஊக்கிகள் வயிற்று வலி மட்டும் வாந்தி மயக்கத்தை தருவிக்கும். இங்கு வலி நிவாரணிகள் (Anti prostagandin) பயனளிக்கும்.
- PMSலிருந்து விடுபட குடும்பத்தாரின் ஒத்துழைப்பும், புரிதலும் ஒவ்வொரு பெண்ணுக்கும் மிகவும் முக்கியம்.
- கொழுப்புச் சத்துள்ள உணவுகள் PMS (Pre menstrual syndome) அறிகுறிகளை அதிகப்படுத்தும். குறைவான கொழுப்புள்ள உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும்.
- காபியில் உள்ள காஃபின் பதற்றத்தையும் எரிச்சலையும் அதிகப்படுத்தும். ஆகவே தவிர்ப்பது அவசியம்.
- வைட்டமின் ஏ,டி அவசியம். இவை அதிகம் உள்ள கேரட், கீரை, பால் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்.
- மேலும், 7-8 மணி நேரம் உறக்கம், மிகவும் அவசியம்.
- மாதவிடாய் நாட்களுக்கு ஒரு வாரம் முன்னதாக மேற்கொள்ளும் நடைபயிற்சி, யோகா, தியானம் ஆகியன உடல் மற்றும் மனரீதியான பாதிப்புகளைக் குறைக்கும்.
- 85% பெண்களுக்கு, PMS இன், ஏதாவது அறிகுறிகள் இருக்கும். அதன் தீவிரத்தன்மையை கொண்டுதான் சிகிச்சை வழங்கப்படும்.
- வைட்டமின்கள் டி, ஈ, பி-6, மற்றும் மெக்னீஸியம், கால்சியம் அடங்கிய மாத்திரைகள் PMSக்கு கைகொடுக்கும்.
- Evening Primrose oil, மற்றும் வைட்டமின் ஈ சேர்ந்த மருந்துகளும் பெரிதும் பயனளிக்கின்றன.
- மூளையின் ரசாயன சுரப்பியான செரட்டொனின் (Serotonin), மனச் சோர்வு மற்றும் பய உணர்ச்சிக்கு காரணமாக உள்ளது.
- உணவுமுறை மாற்றம், உடற்பயிற்சி, உறக்கம், தேவைப்பட்டால் மருந்துகள், மற்றும் கனிவான அணுகுமுறை.. PMS பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வாக அமையும்!
- மறுக்க முடியாத உண்மை...!!
We are urgently in need of kidney donors with the sum of $500,000.00 USD (3 crore) and Also In Foreign currency. Apply Now!,For more info Email: healthc976@gmail.com , Call or whatsapp +91 9945317569
பதிலளிநீக்கு