பல்ஸ் போலியோ...
இப்போது போலியோ பற்றி சற்றே அறிவோம்..
- இளம்பிள்ளை வாதம் என்ற போலியோ நோய், மனித போலியோ வைரஸ் கிருமியின் தாக்குதலால் வருகிறது.
- அசுத்தமான நீர் அல்லது உணவின் மூலமே, போலியோ பரவுகிறது.. ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை மட்டுமே தாக்குகிறது.
- போலியோ கிருமி தாக்கப்பட்ட, 99% குழந்தைகளுக்கு, எந்தவொரு பாதிப்பும் ஏற்படுவதில்லை. (Abortive Polio)
- லேசான காய்ச்சல், வயிற்றுப் போக்கு, அசதி ஆகியனதான், இந்நோயின் ஆரம்ப அறிகுறிகள்.
- 1% த்திற்கும் குறைவான குழந்தைகளுக்கு, நரம்பு மண்டல தாக்குதல் ஏற்படுகின்றது (Paralytic Polio)
- போலியோ ஒரு தொற்றுநோய். இந்நோய், எச்சில், மற்றும் மலம் வழியாக, பரவுகிறது.
- தண்டுவட நரம்புகளைத் தாக்கும் இக்கிருமி கால்களை செயலிழக்கச் செய்கிறது. Paralytic polio. அல்லது, மூச்சு சுவாசத்தையே பாதிக்கிறது. Bulbar polio.
- ஒருமுறை, போலியோ கிருமி தாக்கினால், போலியோ நோய்எதிர்ப்பு சக்தி, நிரந்தரமாக கிட்டுகிறது.
- இந்தத் தன்மையை வைத்துதான், தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்ட பட்டது.
- IPV, என்ற போலியோ தடுப்பூசியை, 1955ல்முதலில் கண்டுபிடித்தவர் சால்க் என்ற அமெரிக்கர். (Salk).
- அவர், தான் கண்டுபிடித்த உயிர்காக்கும் தடுப்பூசிக்கு, காப்புரிமை வேண்டாம் என மறுத்துவிட்டார்.
- எனது கண்டுபிடிப்பு, சூரியனுக்கு ஒப்பானது. அனைவருக்கும் பயனளிக்க வேண்டியது. சூரியனுக்கு காப்புரிமை கேட்க முடியுமா என்று, அதை மறுத்தவர் சால்க்.
- OPV, என்ற போலியோ சொட்டு மருந்தை, 1961ல் கண்டுபிடித்தவர் சாபின். (Sabin). உலகெங்கும் பயன்படுத்தப் படுகிறது.
- போலியோவை முற்றிலும் ஒழிக்க, 1988ல் இருந்தே, இந்தியா அரும்பாடுபடுகின்றது.
- போலியோ அற்ற நாடு என்ற மைல் கல்லை இந்தியா இன்று எட்டுகிறது". பிபிசி (13 ஜனவரி 2014).
- 120 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் இந்த வைரஸ் தொற்றை அறவே ஒழிப்பது என்பது சாதாரண விஷயமல்ல; மிகப் பெரிய சாதனையாகும்.
- சாதனையைக் காக்க, ஐந்து வயதிற்கு உட்பட்ட, நம் குழந்தைகளுக்கு மறவாமல் போலியோ மருந்து கொடுப்போம்..
- போலியோ இல்லாத உலகினை நோக்கி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக