விளையாடும் போது குழந்தைக்கு
காலில் ஒரு சிராய்ப்பு காயம் ஏற்பட்டவுடன்,
பதறியடித்து டெட்டாலால் சுத்தப்படுத்தும்
அம்மாக்களுக்கு..
ஒரு பகிர்வு..
- உங்களுக்கு தெரியுமா..
- பீனால் எனப்படும் கார்பாலிக் அமிலத்தை, ஆன்டிசெப்டிக் எனக் கண்டறிந்தது லிஸ்டர்...
- அறுவை சிகிச்சை என்பது மறுபிறப்பு தானே.. ஆனால், அறுவை சிகிச்சையே, கிருமித்தொற்றால் ஆரம்ப நாட்களில், உயிர்கொல்லியாகவும் இருந்ததாம்..
- அந்த நிலையை மாற்றிக் காட்டிய ஆங்கில மருத்துவர், ஜோசப் லிஸ்டர் (Joseph Lister).
- காயத்தின் வழியே புகும் கிருமிகள்தான் நோயை ஏற்படுத்துகிறது என்ற பாஸ்டரின் கொள்கையை ஏற்று, ஆன்டிசெப்டிக் அறுவை சிகிச்சையை அறிமுகப்படுத்தினார்.
- ஜோசப் லிஸ்டர் ‘ஆன்டிசெப்டிக் அறுவை சிகிச்சையின் தந்தை’ என்றும் போற்றப் படுகிறார்.
- Antiseptic என்ற கிருமிநாசினி, நமது தோலில் கிருமியின் தொற்றை தடுக்கிறது.
- Disinfectant என்ற கிருமிநாசினி, உயிரற்ற பொருட்களின் கிருமிகளை அழிக்கிறது.
- பல சமயங்களில், கிருமிநாசினியின் திடம் மற்றும் செறிவின் அளவுதான், அதன் பயனை காட்டுகிறது.
- ஹைட்ரஜன் பெராக்சைட், 6% செறிவில் antisepticக்காகவும், 30% செறிவில் disinfectant மற்றும் bleach எனப் பயன்படத்தப் படுகிறது.
நமக்குத் தெரிந்த கிருமிநாசினிகள் தான்...
சற்றே விரிவாக..
- ஸ்பிரிட் என்ற 70% எத்தனால் மற்றும் 70% ஐசோப்ரோப்பனால்... இவை, ஊசி போடுவதற்கு முன் துடைக்கும் swab ஆக உபயோகப்படுத்தப்படுகிறது.
- டெட்டால் என்ற 4.8% Chloroxylenol, கிருமிநாசினி திரவமாகவும், சோப்பாகவும் பெரிதும் பயன்படுத்தப் படுகிறது.
- சாவ்லான் என்ற Cetrimide, தோல் மற்றும் அறுவை அரங்க கிருமிநாசினியாக பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.
- Povidone Iodine, என்ற ஐயோடின் கிருமிநாசினி, அறுவை சிகிச்சைக்கு முன், தோலை சுத்தப்படுத்தப் பயன்படுத்தப் படுகிறது.
- Chlorhexidine என்ற லோஷன், அறுவை சிகிச்சைக்கு முன், கைகளைக் கழுவ பெரிதும் உதவுகிறது.
- Gentian violet என்ற ஆன்டிபாக்டீரியல் நிறமி, தீக்காயங்களில் பயன்படுத்த படுகிறது.
- எந்த கிருமிநாசினியை உபயோகித்தாலும், அதில் அலர்ஜி ஏற்படலாம் என்பதால், தோல் பரிசோதனை செய்யும்படி, அறிவுறுத்துகின்றனர் தோல் நிபுணர்கள்.
- இன்னும், பலப்பல கிருமிநாசினிகள் வந்தாலும், நமது தோலுக்கு மிகச் சிறந்த கிருமிநாசினி எது என்று தெரியுமா??
- தண்ணீர்..
- ஆம்...சுத்தமான தண்ணீரை விட, மிகச் சிறந்த கிருமிநாசினி எதுவும் இதுவரை கண்டறியப் படவில்லை..
- ஆகவேதான், காயம் ஏற்பட்டவுடன், சுத்தமான தண்ணீரால் அதை கழுவச் செய்கிறோம்.
- Saline என்ற, 0.9% NaCl நீரும், சுத்தப்படுத்த பயன்படுகிறது.
காற்றே உணவு..
நீரே மருந்து..
என்பது...
காயத்திலும் உண்மையான ஒன்றுதான்.!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக