வெள்ளி, 8 ஏப்ரல், 2016

ஆட்டிஸம்


April 2..

உலக ஆட்டிஸம் விழிப்புணர்வு தினம்..


  • குழந்தைகளுக்கு ஏற்படும் அறிவுத்திறன் குறைபாடே ஆட்டிஸம் எனப்படும்.
  • Autistic aloneness (தனிமை), மற்றும் Insistence on sameness (திரும்பச் செய்தல்) ஆகியன ஆட்டிஸத்தின் அறிகுறிகளாகும்.
  • முதன்முதலாக Leo Kanner, 1943ஆம் ஆண்டு, குழந்தைகளை ஆராய்ந்து அவர்கள் செய்யும் வழக்கமில்லாத செயல்களை கண்டு 'Infantile Autism' என பெயரிட்டார்.
  • ஆட்டிஸ குழந்தைகளுக்கு, மொழித்திறன், சமூக உறவுகள் மற்றும் சிந்தனை மாற்றங்களை ஏற்றுக் கொள்வதில் சிரமம் அதிகம்.
  • ஆட்டிஸம் ஒரு ஸ்பெக்ட்ரம் குறைபாடு எனப்படும். அதாவது சிலரை இந்த நோய் அதிகமாகவும், சிலரை மிதமாகவும் பாதிக்கும்.
  • ஆயிரம் நபர்களில் ஒருவரோ, இருவரோ இந்த பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.
  • இந்தியாவில் சுமார் 10 மில்லியன் பேர்கள் இந்த குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 80% சிறுவர்கள்.
  • ஆட்டிஸத்துக்கு காரணங்களை திட்டவட்டமாகக் கண்டுபிடிக்கப் படவில்லை. நரம்பியல் சம்பந்தப்பட்ட காரணங்கள் உள்ளன என்று கூறப்படுகின்றது.
  • குழந்தையிடம் வினோதமான நடவடிக்கைகள், மொழி வளர்ச்சி இல்லாமை, தனிமை போன்றவை இருந்தால், பெற்றோர்கள் கவனிக்க வேண்டும்.


  • ஆட்டிஸமாக இருக்கக் கூடும்.. பெற்றோர்களே..உங்கள் கவனத்திற்கு..  ஒரு screen shot..
  • ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்டவர்களை முழுமையாக குணப்படுத்த முடியாது.
  • ஆட்டிஸத்தின் பாதிப்பின் தீவிரம் எவ்வளவு அதிகமாக இருந்தாலும் தக்க பயிற்சியானது, பாதிப்புகளைக் குறைக்கும்.
  • ஆட்டிஸத்தில், பல குழந்தைகளின் அறிவுத்திறன், சராசரி மற்றும் சராசரிக்கு மேலேகூட இருக்கும்.

  • இவர்கள் கணித கணக்கீடுகள், வரைகலை, இசைத்திறன் நினைவாற்றல் போன்ற விஷயங்களில் அபார சக்தியுடன் இருப்பார்கள்.
  • இந்தியாவில் தில்லி, சென்னை, கோயம்புத்தூர், கொல்கத்தா, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத் போன்ற நகரங்களில் ஆட்டிஸம் சிறப்புப் பள்ளிகள் இயங்குகின்றன.
  • 'Action for Autism' - இந்த அமைப்பு ஆட்டிஸத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இல்லங்களையும், அவர்களுக்கான பணி மையத்தையும் அமைத்து தருகிறது.
  • ஆட்டிஸம் பாதித்த குழந்தைகளிடம் பரிவு காட்ட கற்றுக்கொள்வோம்.


  • அனைவருக்கும் ஆட்டிஸ விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்!நம்மால் முடிந்த உதவியையும், விழிப்புணர்வையும் தரலாமே..



*
***
*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக