ஞாயிறு, 17 ஏப்ரல், 2016

கட்டை விரல்...


  • விரல்கள் பத்தும் மூலதனம்... அதில் முதல் விரலாம் கட்டை விரல் பற்றி இப்போது..
  • நாம் அனைவரும் இணையத்தில் இணைந்து நிற்பது... நம் கட்டை விரல்களால் தானே...

  • மனிதனின் பரிணாம வளர்ச்சிக்கு முதல் சான்று, கட்டை விரலே! மற்ற விரல்களை எதிர்நிற்கும் இவ்விரல் தான் நமக்கு ஆணிவேர்.. 
  • வேறு எந்த ஆதாரமும் வேண்டியதில்லை.. கடவுள் இருக்கிறார் என்பதற்கு... கட்டை விரலே சாட்சி.. -ஐஸக் நியூட்டன்.
  • 'Grip and Grasp'. என்ற 'இறுக்கி அல்லது தளர்வாக பிடித்தல்' என்ற கைகளின் முக்கியமான பணிக்கு அச்சாணி கட்டைவிரல் தான்..
  • நம்மை இயக்கும், கட்டை விரலை இயக்குவது.. 9 தசைகள், 3 நரம்புகள், 2 எலும்புகள் மற்றும் அதன் மூட்டு..
  • மூளையில், நமது உடல் உறுப்புக்களின் கட்டுப்பாட்டை குறிக்கும் ஆய்வில், கட்டை விரல்களுக்கு அதிக பங்கு உண்டு..
  • கட்டை விரல் என்பதன் மருத்துவச் சொல்லான 'Pollicis', லத்தீன் மொழியிலிருந்து வந்தது. 
  • கட்டை விரல்ரேகை, தனித்தன்மை கொண்டது. வாழ்நாள் முழுக்க மாற்ற முடியாதது என்பதால், மாறாத அடையாளமாக இது கருதப்படுகிறது. 

  • ஒரு குழந்தை பிறப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னர்தான் சுருள்களும் முடிச்சுகளும் கொண்ட ரேகைகள் உருவாகின்றன.
  • நமது கை வழுவழுவென்று இருந்தால், எதையும் பிடிக்க முடியாது.. நாம் இறுக்கமாகப் பிடிக்க உதவுபவை ரேகைகள்.
  • வெற்றி அல்லது ஆமோதிப்பை உணர்த்தும், Thumbs Up, முதன்முதலாக, ரோமானியர்களால் பயன்படுத்த பட்டதாம்.
  • அலை பேசியில் இருக்கும் சின்னஞ்சிறு கீ போர்டில் கட்டைவிரல்களை அழுத்தி வேகமாக குறுஞ்செய்தி அனுப்புவதால் வலி உண்டாகிறது 
  • Blackberry thumb என்ற டி- க்யூவரைன் நோய், தொடந்து கணிணி மற்றும், கைபேசி உபயோகிக்கும் போது வரும், கட்டைவிரல் வீக்கமாகும்..
  • வயோதிகத்தில், 70-80%, கட்டை விரல் தேய்மானம் ஏற்படுகின்றது.
  • கட்டை விரல்களை வைத்து மேலும் ஒரு பயன்பாடு... முத்திரைகள்.. 
  • முத்திரைகள் நாட்டியத்தின் பாவனைகளைக் குறிப்பிடப் பயன்படுகிறது. மேலும், உடலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் உதவுகிறது.. 
  • மனிதர்களின் அடையாளங்கள் அவர்களின் கட்டை நுனிவிரல்கள் என்றால் மிகையாகாது..
  • ஆம்.. இதுதான்.. இன்றைய மனிதனின், பரிணாம வளர்ச்சியாக மாறிவிட்டது!! 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக