தூக்கம்....
- தூக்கம் என்பது ஒரு ஆடம்பரப் பொருளல்ல.. வாழ்வின் ஆதாரம் என்கிறார் ஜேம்ஸ் ஓ ப்ரையன்.
- அகமும் புறமும் இணைந்து அமைதி காணும், உன்னத நிலைதான் தூக்கம்.
- ஒவ்வொரு மனிதனுக்கும், குறைந்தபட்சம் 7-8 மணிநேர தூக்கம் அவசியமானது..
- பிறந்த குழந்தை, ஒரு நாளில் ஏறத்தாழ 17-20 மணிநேரம் வரை தூங்குகிறது..
- தூக்கத்திலும்,நமது மூளை, செயலாற்றிக் கொண்டேதான் இருக்கும்.. நினைவாற்றல் மற்றும் மனகூர்மையை, ஒருங்கிணைக்கிறது.
- Sleep cycle என்ற தூக்க சுழற்சி, 90-120 நிமிடங்கள் நீடிக்கும்.. இவ்வாறு, ஒரு சுழற்சி மீண்டும் 4-5 முறை வரை ஓரிரவில் நிகழ்கிறது.
- ஆழ்ந்த உறக்கம் எனப்படும், REM sleep, நமது உடல்நலம்,வளர்ச்சி, சிந்தனைத் திறன் மற்றும் சுரப்பிகளின் செயல்பாட்டிற்கு உதவுகிறது
- ஆழ் நிலைத் தூக்கத்தில் தான், நாம் கனவுலகத்தில் சஞ்சரிக்கின்றோம்.. இந்நிலையில், இருதயத் துடிப்பு சற்றே கூடுகிறது.
- பத்து மருத்துவர்களுள் ஆறு பேர் தூக்கமின்மையால் அவதிப்படுகின்றனர் என்கிறது ஆய்வு.
- உயிரினங்களில், இயற்கையான தூக்கத்தை தள்ளிப்போட முற்படும் ஒரே உயிரினம்.. மனிதன் மட்டுமே.
- மூளையில் சுரக்கும் மெலட்டோனின் தான் தூக்கத்திற்கு மிகவும் இன்றியமையாத ஒன்றாகும்.
- மெலட்டோனின் சுரப்பதை, தடுத்து, தூக்கத்தை கெடுப்பதில், முக்கிய பங்கு, caffeineக்கு.. இரண்டாம் பங்கு, சமூக வலைதளங்களுக்கு.
- Shift system என்ற இரவும், பகலும் மாறி வரும் பணிமுறைகளையும், Jetlag என்ற தொடர் வெளிநாட்டு பயணங்களையும் நமது உடல் எப்போதும் ஏற்றுக்கொள்வதில்லை.
- தூக்கமின்மையால் நமக்கு மனச்சோர்வு, மறதி, பணித்திறன் குறைவு, உடல் பருமன், சர்க்கரை மற்றும் இரத்த அழுத்தம் போன்றவை ஏற்படலாம்.
- தூக்கமின்மை, போதையில் வாகனத்தை ஓட்டுவதைக் காட்டிலும் ஆபத்தானது என்கிறது ஆய்வு. ஒரு வருடத்தில், கிட்டத்தட்ட 10,000 விபத்துக்கள் நடக்கின்றன.
- Microsleep எனப்படும், விழித்தபடியே வரும் நொடித் தூக்கம், தூக்கமின்மையை காட்டுகிறது.
- Power nap என்ற பூனைத்தூக்கம், நமது பணித்திறனை அதிகரிக்கின்றது.. பகலில், பூனைத்தூக்கம் பயனே தரும்.
- ஆக.. பகலினில் ஆட்டம்.. இரவினில் தூக்கம்.. என இனியாவது, மாறலாமே!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக